சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 25, 2026 05:11 PM
சாலவாக்கம்: படூர் கிராமத்தில் இருந்து மலையாங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம், விபத்து ஏற்படுத்தும் வகையில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், படூர் – மலையாங்குளம் வரை செல்லும் சாலையோரம், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக, சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில், சில மாதங்களுக்கு முன் பலத்த காற்றுடன் பெய்த மழையால், மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
