/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத குளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
தடுப்பு இல்லாத குளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 05, 2025 01:56 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையோரம், பிள்ளைப்பாக்கத்தில் தடுப்பு இல்லாத குளத்தால், விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் நெடுஞ்சாலையானது, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்கா இந்த சாலையையொட்டி இருப்பதால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக உள்ளது.
தவிர, சுற்றுவட்டார கிராமத்தினர், இந்த சாலை வழியே ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், காஞ்சி புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். இந்த சாலையில், பிள்ளைபாக்கம் சிப்காட் திட்ட அலுவலகம் அருகே குளம் அமைந்துள்ளது.
நெடுஞ்சாலையோரம் தடுப்பு இல்லாத குளத்தால், சாலையில் செல்லும் வாகனங்கள், குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையோரம் உள்ள குளத்திற்கு, தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.