/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடம் சர்வீஸ் சாலை நடுவே ‛பைப் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
ஒரகடம் சர்வீஸ் சாலை நடுவே ‛பைப் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஒரகடம் சர்வீஸ் சாலை நடுவே ‛பைப் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஒரகடம் சர்வீஸ் சாலை நடுவே ‛பைப் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 23, 2025 01:58 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் சர்வீஸ் சாலை நடுவே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பாலாறு குடிநீர் குழாயினால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், வாலாஜாபாத் மார்க்கமாக இருந்த வரும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் சென்று, ஒரகடம் மேம்பாலம் கீழ், இடதுபுறம் திருப்பி, ஸ்ரீபெரும்புதுார் செல்கின்றன.
இந்த நிலையில், ராயல் என்பீல்டு தொழிற்சாலை அருகே, சர்வீஸ் சாலை நடுவே, போக்குவரத்திற்கு இடையூறாக பாலாறு குடிநீர் கான்கிரீட் குழாய் உள்ளது. இரவு நேரத்தில் சர்வீஸ் சாலையில் வரும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக கான்கிரீட் குழாயில் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சர்வீஸ் சாலையில் விபத்து ஏற்படும் வகையில், இடையூறாக உள்ள கான்கிரீட் குழாயை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.