/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிமென்ட் கல் நடைபாதை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சிமென்ட் கல் நடைபாதை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சிமென்ட் கல் நடைபாதை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சிமென்ட் கல் நடைபாதை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 03, 2026 05:22 AM

குருவிமலை: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தில், சேதமடைந்த நிலையில் உள்ள சிமென்ட் கல் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் - உத்திர மேரூர் சாலை, களக் காட்டூர் ஊராட்சி, குருவிமலை கிராம சாலையோரம், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சிமென்ட் கல் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலை வழியாக கட்டுமான பணிக்கு எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற கனரக வாகனங்களால், நடைபாதையில் பதிக்கப்பட்டு இருந்த சிமென்ட் கற்கள் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் போது, நடைபாதையில் மழைநீர் தேங்கியுள்ள பள்ளத்தால், நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், குருவிமலை கிராம சாலையோரம் சேதமடைந்த சிமென்ட் கல் நடைபாதையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

