/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 26, 2025 11:25 PM

ஸ்ரீபெரும்புதுார்:சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஓய்வெடுக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் --- மணிமங்கலம் சாலையை பயன்படுத்தி, சேத்துப்பட்டு, மலைப்பட்டு, மாகாணியம், சோமங்கலம், பஷ்பகிரி, கொளத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
தவிர, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, தாம்பரம் - முடிச்சூர் சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
கொளத்துார், நாவலுார், மலைப்பட்டு, சேத்துப்பட்டு, பிள்ளைப்பாக்கம் கிராமங்களில் மாடு வளர்ப்போர் தங்களின் மாடுகளை கொட்டகைளில் வைத்து பராமரிப்பது இல்லை. மேய்ச்சலுக்கு வரும் மாடுகள், சாலையில் ஓய்வெடுக்கின்றன.
இதனால், சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். அவ்வாறு ஓய்வெடுக்கும் மாடுகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் போது, வேகமாக வரும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, விபத்திற்கு வழிவகுக்கும் விதமாக, நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளை பிடித்து கோ - சாலையில் ஒப்படைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.