/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 15, 2025 05:38 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண் டலுார் -- வாலாஜாபாத் சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.
ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதிகளில் உள்ள நுாற்றுக்கணக்காக தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து நிறை ந்த இந்த நெடுஞ்சாலை யில், வல்லம், வடகால், தெரேசபுரம், போந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மாடு களை வளர்ப்போர், அவற்றை தங்கள் வீட்டில் கொட்டகை அமைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்காக வெளியே அவிழ்த்து விடுகின்றனர்.
அவை, கூட்டமாக சாலைகளில் திரிவதோடு, சாலையின் குறுக்கே மிரண்டு ஓடுவதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் ஒப்படைக்கவும், மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

