/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 12, 2025 12:36 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் உதவி கோட்ட நெடுஞ்சாலை எல்லையில், உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலை அருகே உள்ள சிறுங்கோழி, பள்ளியகரம், நெல்வாய் கூட்டு சாலையை சேர்ந்த பகுதிவாசிகள், தாங்கள் வளர்க்கும் மாடுகளை சாலையோரத்தில் மேய்ச்சலுக்காக கயிற்றால் கட்டி வைக்கின்றனர்.
அப்போது, மாடுகள் சாலை நடுவே நின்று, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், மாடு கட்டி வைத்திருக்கும் கயிறுகளில் சிக்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையோரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.