சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
UPDATED : அக் 26, 2026 07:51 PM
ADDED : அக் 26, 2026 07:46 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் தாயார்குளம் பிரதான சாலையை மறித்து நிற்கும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மாடுகள் வளர்ப்போர், தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்கு அவித்து விட்டு விடுகின்றனர். இந்த மாடுகள் பிள்ளையார்பாளையம், தாயார் குளம் சாலை, மண்டபம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்காக சுற்றித் திரிகின்றன.
சாலையை மறித்து நிற்பதோடு, குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், பாதசாரிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், காஞ்சிபுரம் தாயார்குளம் சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் ஆய்வு செய்து, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மாட்டு தொழுவத்தில் ஒப்படைப்பதோடு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
