/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 15, 2024 09:53 PM

ஒரகடம்:வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில், செரப்பணஞ்சேரி அடுத்த, காரணித்தாங்களில் இருந்து, பெரிஞ்சம்பாக்கம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை வழியே நாள்தோறும், மாணவர்கள் மற்றும் அப்பகுதியினர் சென்று வருகின்றனர்.
இந்த சாலையை ஒட்டி, மின்கம்பங்கள் வழியே, மின் வழித்தடம் செல்கிறது. இவற்றில் சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.