/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மணிமங்கலம் சாலையில் சேதமான பாலத்தில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
மணிமங்கலம் சாலையில் சேதமான பாலத்தில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மணிமங்கலம் சாலையில் சேதமான பாலத்தில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மணிமங்கலம் சாலையில் சேதமான பாலத்தில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 26, 2024 02:07 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் சாலையானது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்கா இந்த சாலையை ஒட்டி இருப்பதால், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்தது.
குறுகிய சாலையால், நெரிசலும், அடிக்கடி விபத்தும் நடந்துவந்ததால், இச்சாலையை இருவழியில் இருந்து நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, ஸ்ரீபெரும்புதுார் முதல் மணிமங்கலம் வரை, விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதற்காக, மணிமங்கலம், மலைப்பட்டு, கொளத்துார் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த மூன்று பாலங்கள், நான்கு வழிக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த சாலையில் மலைப்பட்டில் உள்ள பாலம் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதனால், இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், பாலத்தில் மீது விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பலத்தின் மீதுள்ள பள்ளத்தில் விபத்தில் சிக்கி, விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
எனவே, உயிர்சேதம் ஏற்படும் முன், ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் சாலையில் சேதடைந்துள்ள மலைப்பட்டு பாலத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.