/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலை மேம்பால தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
நெடுஞ்சாலை மேம்பால தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலை மேம்பால தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலை மேம்பால தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 17, 2024 10:17 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் மேம்பாலத்தில் உள்ள தடுப்புகள் சேமடைந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் மேம்பாலம் உள்ளது. இவ்வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக பாலத்தின் இருபுறமும், பக்கவாட்டு இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது. தற்போது, முறையான பராமரிப்பு இல்லாததால், தடுப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இதனால், மேம்பாலத்தில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று முந்தி செல்லும் போது, எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், பாலத்தில் மின்விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, சேதமடைந்த இரும்பு தடுப்புகளை சீரமைத்து, மேம்பாலத்தில் மின்விளக்கு அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.