/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகவதி ஆற்றுபாலத்தில் ஓட்டை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
வேகவதி ஆற்றுபாலத்தில் ஓட்டை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வேகவதி ஆற்றுபாலத்தில் ஓட்டை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வேகவதி ஆற்றுபாலத்தில் ஓட்டை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 27, 2024 12:37 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், கிருஷ்ணன் தெரு, தென்கோடி பகுதிக்கும் - திருப்பருத்திக்குன்றத்திற்கும் இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் காஞ்சிபுரத்திற்கு சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள இந்த பாலத்தில், இரு ஆண்டுகளுக்கு முன் பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டது. அதை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், சீரமைப்பு செய்த பகுதியில் மீண்டும் ஓட்டை ஏற்பட்டுள்ளது.
மின்விளக்கு வெளிச்சம் இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் சிறுபாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாலத்தின் ஓட்டை ஏற்பட்டுள்ள பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மேலும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாலத்தில் உள்ள ஓட்டை மேலும் பெரிதாகும் சூழல் உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள் வேகவதி ஆற்று சிறுபாலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.