ADDED : டிச 14, 2025 05:44 AM

காஞ்சிபுரம்: சிறுவாக்கம் - பரந்துார் கூட்டுசாலையில், மின் கம்பம் சாய்ந்திருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, காரை - பரந்துார் கூட்டு சாலையில் இருந்து, சிறுவாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக காரை, ஏனாத்துார் ஆகிய கிராம மக்கள், சிறுவாக்கம் கிராமம் வழியாக, மோட்டூர், வரதாபுரம், சாமந்திபுரம், மூலப்பட்டு, அரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையோரம், மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்று அடித்தால், மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
எனவே, சாலையோரம் சாய்ந்து கிடக்கும் மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
