/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
/
மின் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 10, 2024 12:44 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் இருந்து, சென்னை, ஸ்ரீபெரும்புதுார் மார்க்கமாக வெளியூர் செல்லும் வாகனங்கள், பொன்னேரிக்கரை வழியாக சென்று வருகின்றன. நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை, காஞ்சிபுரம் நகருக்குள் நுழையும் பிரதான சாலையாகும். இச்சாலையில் மின் விளக்கு எரியாததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள உயர்மட்ட மேம்பாலம், நெடுஞ்சாலையில், மின் விளக்குகள் எரிவதில்லை. சாலையில் பொருத்தப்பட்டுள்ள ஒளிபிரதிபலிப்பான்களை பார்த்து வாகனங்களை இயக்குகின்றனர். மின்விளக்கு எரியாததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இச்சாலை நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், மின்விளக்கு பராமரிப்பு கோனேரிக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. அடிக்கடி ஏற்படும் மின்விளக்கு பிரச்னையை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்