/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர மண் அரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையோர மண் அரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 16, 2025 01:22 AM

காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் ரயில் மேம்பாலத்தில் இருந்து, கிதிரிப்பேட்டை செல்லும் சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டிருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
வாலாஜாபாதில் இருந்து, படப்பை செல்லும் சாலையில், வாலாஜாபாத் ரயில்வே பாலம் உள்ளது. இந்த ரயில்வே பாலம் வழியாக சுற்றுவட்டார பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் மேம்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கிதிரிப்பேட்டை கிராம சாலையில் திரும்பும் போது, சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மண் அரிப்பு பள்ளத்தில், இருசக்கர வாகனத்தை இயக்கும் போது, நிலை தடுமாறி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒரகடம் மார்க்கத்தில் இருந்து, ரயில்வே பாலம் வழியாக வாலாஜாபாத் நோக்கி செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, கிதிரிப்பேட்டை சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சவுகரியமாக மண் அரிப்பை சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.