/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வர்ணம் பூசாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி
/
வர்ணம் பூசாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 16, 2025 01:08 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட பென்னலுார் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் அடிப்படை தேவைக்காகவும், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்லவும், பென்னலுார் பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் சாலைகளை இணைக்கும் சாலையாக விளங்கும் பென்னலுார் பிரதான சாலையில், நாள்தோறும் ஏராளமான கார் பைக், பள்ளி மற்றும் கல்லுாரி பேருந்துகள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை. மேலும், வேகத்தடையை அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகையும் அமைக்கவில்லை. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூச, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.