/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையோர முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 30, 2024 03:45 AM

கீழம்பி: உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதியில் இருந்து, வேலுார், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல், செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையோரம் ஆங்காங்கே வளர்ந்துள்ள சீமை கருவேல மரக்கிளைகள், நீண்டு வளர்ந்துள்ளன.
இச்செடிகளில் உள்ள கூர்மையான முட்கள், கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கை, முகம், கண் உள்ளிட்ட உடல் பாகங்களை பதம் பார்த்து விடுகின்றன.
எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளை காயப்படுத்தும் வகையில், சாலையோரம் நீண்டு வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.