/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புழுதி பறக்கும் ஏரிக்கரை சாலை ஆற்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் அவதி
/
புழுதி பறக்கும் ஏரிக்கரை சாலை ஆற்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் அவதி
புழுதி பறக்கும் ஏரிக்கரை சாலை ஆற்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் அவதி
புழுதி பறக்கும் ஏரிக்கரை சாலை ஆற்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 25, 2024 02:23 AM

ஆற்பாக்கம், காஞ்சிபுரம் ஒன்றியம், ஆற்பாக்கம் ஏரிக்கரை சாலை சேதமடைந்து போக்குவரத்து லாயக்கற்ற சாலையில் இருந்தது. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, 2019- - 20 நிதியாண்டில், மாவட்ட திட்டக் குழு சேமிப்பு நிதியில் இருந்து, 39.25 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக ஜல்லிகற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறியுள்ளதால், கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது.
இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், கண்களில் துாசு விழுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேதமடைந்து புழுதி பறக்கும் ஆற்பாக்கம் ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.