/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இணைப்பு சாலையில் மரண பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
இணைப்பு சாலையில் மரண பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
இணைப்பு சாலையில் மரண பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
இணைப்பு சாலையில் மரண பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 20, 2025 05:26 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் இணைப்பு சாலை சேதமடைந்து, மோசமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் - சிங்பெருமாள் கோவில் ஆறு வழி மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., உடையது.
சென்னக்குப்பம், மாத்துார், வல்லம், வடகால், போந்துார், ஒரகடம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தங்களின் அடிப்படை தேவை களுக்காக, இந்த சாலையை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
தவிர, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வல்லம் - வடகால் பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கொண்டுவர மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றி செல்ல என, தினமும் ஏராளமான லாரி, கன்டெய்னர் மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்கிறன.
இந்த சாலையில் உள்ள இணைப்பு சாலை குண்டும் குழியுமாக மாறி படுமோசமாக, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு மென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

