/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடம் சாலையோரம் மண் குவியல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
ஒரகடம் சாலையோரம் மண் குவியல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஒரகடம் சாலையோரம் மண் குவியல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஒரகடம் சாலையோரம் மண் குவியல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 22, 2025 12:20 AM

ஸ்ரீபெரும்புதுார், வண்டலுார் -- வாலாஜாபாத் நான்குவழி மாநில நெடுஞ்சாலை, 33 கி.மீ., துாரம் கொண்டது. ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் மிக முக்கிய சாலையாக உள்ளது.
ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.
வாகன போக்குவத்து அதிகம் உள்ள இந்த சாலை, பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மண் திட்டுகள் குவிந்து உள்ளன. சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மண் குவியலில் சிக்கி, நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள மண் குவியலை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.