/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலத்தில் தார் கலவை குவியல்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
பாலத்தில் தார் கலவை குவியல்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பாலத்தில் தார் கலவை குவியல்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பாலத்தில் தார் கலவை குவியல்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 04, 2026 05:45 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாறு பாலத்தின் சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தார் கலவை குவியலை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், ஓரிக்கை - குருவிமலை கிராமத்திற்கு இடையே செல்லும் பாலாறின் குறுக்கே, 25 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது.
இப்பாலம் வழியாக உத்திரமேரூர், அச்சிறுப்பாக்கம், வேடந்தாங்கல் மதுராந்தகம், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பாலத்தின் சாலை இணைப்பு பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டு இருந்தது. விரிசல் ஏற்பட்ட பகுதியை நெடுஞ்சாலைத் துறையினர் தார் கலவை மூலம் சீரமைத்தனர். மீதமான தார்கலவையை அகற்றாமல் சாலையோரம் குவியலாக அப்படியே விட்டு விட்டனர்.
அகலம் குறைவான இந்த பாலத்தில் செல்லும் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், கரடு முரடாக உள்ள தார் கலவை குவியலால், நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, ஓரிக்கை பாலாறு பாலத்தின் சாலையோரம் போக்குவரத்திற்கு இடையே உள்ள தார் கலவை குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

