/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
சேதமான சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 13, 2025 01:13 AM

காஞ்சிபுரம்,:வேகவதி ஆற்று கால்வாய் ஓரம் மண் அரிப்பால், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, பிள்ளையார்பாளையத்தில் இருந்து திருப்பருத்திகுன்றம், விப்பேடு, விஷார், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது.
இதில், வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதனால், மின்விளக்கு வெளிச்சம் இல்லாத இப்பகுதியில், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, சாலை சேதமடைந்த பகுதியில், தடுமாறி கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.