/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலத்தில் பழுதடைந்த மின்விளக்குகள் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

ADDED : அக் 09, 2025 02:54 AM

கோனேரிகுப்பம்,:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புதிய ரயில்வே மேம்பாலத்தில் பழுதடைந்த தெரு மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புதிய ரயில்வே மேம்பாலம் வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ரயில்வே மேம்பாலத்தில் உள்ள பல தெரு மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால், ரயில்மேம்பாலம் இருளில் மூழ்கியுள்ளதால், சமூக விரோதிகள் மேம்பால மைய தடுப்பு பகுதியில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
இதனால், இரவு நேரத்தில் , மேம்பாலம் வழியாக தனியாக டூ -- வீலரில் செல்லும் பெண்கள், கல்லுாரி மாணவியர் அச்சப்படுகின்றனர்.
மேலும், மேம்பாலத்தை கடந்து சென்னை - -பெங்களூரூ சாலையுடன் இணையும், பொன்னேரிக்கரை சாலையில் உள்ள பல மின்விளக்குகளும் பழுதடைந்து உள்ளன.
எனவே, ரயில்வே மேம்பாலம் மற்றும் பொன்னேரிக்கரை சாலையில் பழுதடைந்துள்ள தெரு மின்விளக்குகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.