/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பல்லாங்குழியான அருங்குன்றம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
பல்லாங்குழியான அருங்குன்றம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
பல்லாங்குழியான அருங்குன்றம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
பல்லாங்குழியான அருங்குன்றம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 23, 2025 01:58 AM

அருங்குன்றம்: கனரக வாகனங்கள் அதிகரிப்பால் பல்லாங்குழியான அருங்குன்றம் சாலையை சீரமைத்து தர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம்,திருமுக்கூடலில் இருந்து அருங்குன்றம் வழியாக சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், மதுார் கூட்டுச்சாலை துவங்கி அருங்கு ன்றம் பேருந்து நிறுத்தம் வரை அடுத்தடுத்து நான்கு இடங்களில் சாலையோரத்தில் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இத்தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் லோடு வாகனங்கள் அச்சாலை வழியாக பழையசீவரம் சென்று அங்கிருந்து பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், அருங்குன்றம் சுற்றியுள்ள சிறுதாமூர், பட்டா, மதுார் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து இயங்கும் கனரக வாகனங்களும் அருங்குன்றம் சாலை வழியாக இயங்குகிறது.
கனரக வாகனங்கள் அதிகரிப்பால், மதுார் கூட்டுச்சாலை துவங்கி, அருங்குன்றம் பேருந்து நிறுத்தம் வரையிலான சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதோடு இரவு நேரங்களில் விபத்துகளில் சிக்குகின்றனர்.
எனவே, அருங்குன்றம்சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

