/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீயட்டி சாலை சீரமைப்பு பணி மீண்டும் துவக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
சீயட்டி சாலை சீரமைப்பு பணி மீண்டும் துவக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சீயட்டி சாலை சீரமைப்பு பணி மீண்டும் துவக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சீயட்டி சாலை சீரமைப்பு பணி மீண்டும் துவக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 06, 2025 12:49 AM

வாலாஜாபாத்,:சிறுவள்ளூர் அடுத்த புதுரோடு துவங்கி, சீயட்டி வரையிலான சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், ஆண்டிசிறுவள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுரோடு குடியிருப்பு பகுதியில் இருந்து, சீயட்டி வழியாக காரை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
ஆண்டிசிறுவள்ளூர், சீயட்டி உள்ளிட்ட கிராம மக்கள், இச்சாலை வழியை பயன்படுத்தி காரை, வேடல், பொன்னேரிக்கரை போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் புதுரோடு அருகே துவங்கி, சீயட்டி வரையிலான 1.5 கி.மீ., சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதையடுத்து, வாலாஜாபாத் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சீயட்டி கிராம சாலை சீரமைப்பு பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கின. முதற்கட்டமாக சாலையில் பழைய தார் பெயர்த்தல் மற்றும் சாலை இருபுறமும் மண் அணைத்தல் பணிகள் நடைபெற்றன.
அதை தொடர்ந்து அடுத்தகட்ட பணி துவங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், அச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, நிறுத்தப்பட்டு உள்ள சீயட்டி கிராம சாலைக்கான பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
சீயட்டி சாலை பணி துவங்கிய போது சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், அச்சமயம் சாலை பணி நிறுத்தப்பட்டது.
பணியை மீண்டும் துவக்க ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தி, விரைவாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.