/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை எரிப்பதை தவிர்க்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
குப்பை எரிப்பதை தவிர்க்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : டிச 02, 2025 04:58 AM

காஞ்சிபுரம்: குப்பை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பின்னாவரம் ஊராட்சியில், சேந்தமங்கலம் துணை கிராமம் உள்ளது. இங்கு, ஊராட்சியில் சேரும் குப்பை தரம்பிரிக்கும் கட்டமைப்பு வசதிகளை கால்நடை மருத்துவமனை கட்டடம் அருகே ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பின்னாவரம் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பை, மட்கும் குப்பை, மட்காத குப்பை என, இரு விதமாக தரம்பிரிப்பதில்லை. மாறாக குப்பை குவியலை மலை போல் கொட்டி எரித்து விடுகின்றனர்.
இதனால், சேந்தமங்கலம் கிராமத்தில் இருந்து, கணபதிபுரம் மோட்டூர் கிராமம் இடையே புகையால் மாசு ஏற்படுவதோடு, அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.
எனவே, பின்னவாரம் ஊராட்சி நிர்வாகத்தினர், குப்பை எரிப்பதை தவிர்த்து முறையாக தரம்பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

