/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓரிக்கை சாலையோரத்தில் எம்.சாண்ட் மணல் குவியல்
/
ஓரிக்கை சாலையோரத்தில் எம்.சாண்ட் மணல் குவியல்
ADDED : செப் 23, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் இருந்து, உத்திரமேரூர் செல்லும் வாகனங்கள் ஓரிக்கை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், இவ்வழியாக கட்டுமானப் பணிக்கு பொருட்கள் செல்லும் லாரிகளில் இருந்து சிதறும் எம்.சாண்ட் மணல் சாலையோரம் குவியலாக உள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, மணல் குவியலில் சிக்கி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, ஓரிக்கையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் குவிந்துள்ள எம்.சாண்ட் மணலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.