ADDED : டிச 21, 2024 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, வலம்புரி விநாயகர் கோவில் தெருவில், கண்ணபிரான் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு அருகிலான மனையில், தனிநபர் கட்டடப் பணி மேற்கொண்டு வருகிறார்.
மனை கோவிலுக்கு சொந்தமானதெனவும், கட்டடப் பணியை நிறுத்தம் செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் நேற்று வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகம் முன் குவிந்தனர்.
அவர்களிடம் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தினர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், நீதிமன்றம் வாயிலாக தீர்வு காணக்கோரி சமரசம் பேசியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.