/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மர்பி' கால்பந்து போட்டி 20 அணிகள் பலப்பரீட்சை
/
'மர்பி' கால்பந்து போட்டி 20 அணிகள் பலப்பரீட்சை
ADDED : மார் 05, 2024 04:09 AM
சென்னை, : லயோலா கல்லுாரியில் நேற்று துவங்கிய, எல்.டி.மர்பி கால்பந்து போட்டியில், 20 அணிகள் பங்கேற்றுள்ளன.
சென்னை லயோலா கல்லுாரி சார்பில் ஆண்டுதோறும், கல்லுாரியின் மறைந்த முன்னாள் முதல்வரான எல்.டி.மர்பி நினைவு கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான போட்டிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி மைதானத்தில் நேற்று காலை துவங்கியது.
இதில், முன்னணிஅணிகளான லயோலா, செயின்ட் ஜோசப், எம்.சி.சி., - கேரளாவின் அம்பேத்கர் அரசு கல்லுாரி உட்பட மொத்தம் 20 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை துவங்கிய முதல் போட்டியில், லயோலா பொறியியல் கல்லுாரிமற்றும் ஆசான் கலைக் கல்லுாரி அணிகள் மோதின. இதில், 6 - 0என்ற கோல் கணக்கில், லயோலா அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில், கேரளாவின் எம்.இ.எஸ்., அஸ்மாபி கல்லுாரி அணி, 7 - 1 என்ற கோல் கணக்கில், சென்னை சர் தியாகராயா கல்லுாரியை தோற்கடித்தது.
போட்டிகள் தொடர்ந்து, 'நாக் - அவுட்' முறையில், மார்ச் 8ம் தேதி வரை நடக்கின்றன.

