/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் நம்மாழ்வார் சாற்றுமறை உத்சவம்
/
காஞ்சியில் நம்மாழ்வார் சாற்றுமறை உத்சவம்
ADDED : ஜூன் 09, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நம்மாழ்வார் சாற்றுமறை உத்சவம் நேற்று நடந்தது. இதில், இரவு 7:00 மணிக்கு பெருமாள் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது.
இரவு 8:00 மணிக்கு பெருமாள் கோவிலில், ஆழ்வார் பிரகாரமாக நம்மாழ்வார் சன்னிதிக்கு எழுந்தருளினார். அங்கு நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது.
இரவு 9:30 மணிக்கு பெருமாள், நம்மாழ்வார் சன்னிதியில் இருந்து, திருமலை படியில் எழுந்தருளினார். அங்கு நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது.. அதை தொடர்ந்து நம்மாழ்வார், சன்னிதிக்கும், பெருமாள், கண்ணாடி அறைக்கும் எழுந்தருளினர்.