/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் வலுவிழந்து வரும் நந்தி மண்டபம்

ADDED : ஜன 01, 2026 05:11 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் குரு கோவிலில் நந்தி மண்டபத்தின் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால், வலுவிழந்து வருகிறது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் முடங்கு வீதியில், குரு கோவில் என, அழைக்கப்படும் கமலாம்பிகை சமேத காயாரோகணீஸ்வரர் கோவில் உள்ளது. குரு பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு வியாழக்கிழமைகளில் திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி, பரிகார பூஜை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தின் கோபுரத்தில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர்கள் வேரூன்றி வளர்வதால், வலுவிழந்து நாளடைவில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு நந்திமண்டபம் முழுதும் இடிந்து விழும் சூழல் உள்ளது.
எனவே, நந்தி மண்டப கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளை வேருடன் அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.