/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கூசாபேட்டையில் குறுகிய சாலை: ஒருவழிப்பாதையாக மாற்றப்படுமா?
/
சங்கூசாபேட்டையில் குறுகிய சாலை: ஒருவழிப்பாதையாக மாற்றப்படுமா?
சங்கூசாபேட்டையில் குறுகிய சாலை: ஒருவழிப்பாதையாக மாற்றப்படுமா?
சங்கூசாபேட்டையில் குறுகிய சாலை: ஒருவழிப்பாதையாக மாற்றப்படுமா?
ADDED : டிச 16, 2025 06:06 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கூசாபேட்டை சாலையை, ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் இருந்து, சேக்குபேட்டை, எண்ணெய்கார தெரு, ரயில்வே சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு, பைக், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் சங்கூசாபேட்டை பிரதான சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்கு வரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த குறுகலான இச்சாலையில், எதிரெதிர் திசையில் கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பி செல்ல முடியாத சூழல் உள்ளது.
எனவே, போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சங்கூசாபேட்டை சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் அல்லது கார், வேன், லாரி உள்ளிட்ட வாகன போக்குவரத்திற்கு தடை விதித்து தடுப்பு அமைக்க மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.