ADDED : ஜன 14, 2025 12:26 AM

அ நிறம் | அளவு
நடேசன் பள்ளி
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாசாலா பள்ளியில், 30ம் ஆண்டு மார்கழி தெய்வத்தமிழ் கலைவிழா நடந்தது. இதில், கிருஷ்ணராவ் ஓதுவாருக்கு, 'தேவாரமணி' விருதையும், கவுரி அம்மையார் ஓதுவாருக்கு, 'திருவாசகமணி' விருதையும் பள்ளி நிறுவனர் ராமசுப்ரமணியன் வழங்கினார். மேலும், பாவைப்பாடல்கள், ஆன்மிகத் திரட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிவேதினி, உத்தராபாரதி, சஹானாஸ்ரீ ஆகிய மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. உடன், பள்ளி தலைமை முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன், ஓதுவார்கள் ராமமூர்த்தி, சங்கரன் பிள்ளை.
