ADDED : ஆக 12, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நேரு கிளை நுாலகத்தில், தேசிய நுாலக தின விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம், ஏகாம்பநாதர் சன்னிதி தெருவில் அமைந்துள்ள நேரு முழு நேர கிளை நுாலகத்தில், இந்திய நுாலக தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாள் விழாவும், தேசிய நுாலக தின விழா வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் நேற்று நடந்தது.
வாசகர் தணிகைவேல் வரவேற்புரையாற்றினார். வாசகர் வட்ட கவுரவ தலைவர் ராணி செல்வராஜ், ஓய்வு பெற்ற அஞ்சல்துறை, முதுநிலை கண்காணிப்பாளர் சாந்தகுமார், புலவர் திருவிற்கோலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கல்லுரி மாணவ -– மாணவியருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நுாலகர் கலா நன்றி கூறினார்.
