ADDED : ஏப் 24, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:சங்கராபுரத்தில், நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.
வாலாஜாபாத் அடுத்த, சங்கராபுரம் ஆதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி இயங்கி வருகிறது. இந்த கல்லுாரி சார்பில், கீழம்பி கிராமத்தில், 15 நாள் நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடந்தது.
இதில், பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு கட்டடங்கள் அருகே சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வந்தன.
நிறைவு நாளான நேற்று, மஞ்சப்பை அவசியம், போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு, நெகிழி ஒழிப்பு, பெண் கல்வி அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
இதில், பாலர் சபை நிர்வாகிகள், ஆதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் தேவராஜூ, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நாகவெங்கடேசன், கீழம்பி ஊராட்சி தலைவர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
