ADDED : மே 17, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், தேரோட்டத்தையொட்டி, தமிழகம் இயற்கை விவசாய பயிற்சி மையம் சார்பில், காந்தி சாலை வழக்கறுத்தீஸ்வரர் கோவில் எதிரில் இயற்கை விளைபொருட்கள் கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது.
பயிற்சி மைய நிறுவனர் எழிலன் கண்காட்சியை துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில், அரிசி, மக்காச்சோளம், கரும்புச் சக்கை ஆகியனவற்றால் செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள், ஆர்கானிக் தைல வகைகள், குளியல் சோப் வகைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.