/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தீப்பாஞ்சியம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு
/
தீப்பாஞ்சியம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு
ADDED : அக் 16, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவர்மேடு தீப்பாஞ்சியம்மன் கோவிலில், கடந்த 4ம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்கியது. விழாவையொட்டி மூலவர் அம்மனுக்கு பெருந்தேவி, பச்சமுத்து, பெரியாயி, மழைமாரி, கருமாரியம்மன், சரஸ்வதி தேவி, விஸ்வரூப தரிசனம் என, பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விஜயதசமியன்று சுவாமி வீதியுலா முக்கிய வீதி வழியாக நடந்தது. நவராத்திரி விழாவின் நிறைவாக நேற்று மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் சங்கர் சுவாமிகள், யோகி ஆகியோர் செய்திருந்தனர்.