/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு அமைப்பதில் அலட்சியம்
/
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு அமைப்பதில் அலட்சியம்
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு அமைப்பதில் அலட்சியம்
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு அமைப்பதில் அலட்சியம்
ADDED : ஏப் 10, 2025 07:52 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாதில் இருந்து, ஒரகடம், படப்பை வழியாக சென்னை செல்லும் பிரதான சாலை உள்ளது. இச்சாலையில், வாலாஜாபாத் வட்டார அரசு மருத்துவமனை அடுத்து ரயில்வேமேம்பாலம் உள்ளது.
இந்த ரயில்வே பாலத்தின் வழியாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை மற்றும் சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்கள் வாயிலாக சென்று வருகின்றனர்.
இந்த பாலத்தின் மீது, இதுவரை மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் இருந்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து, எதிரே வரும் வாகனங்கள் மற்றும் ஒன்றன்பின் ஒன்றென கடந்து செல்லும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன.
வாலாஜாபாத் ரயில்வே பாலம் மற்றும் அதன் அருகாமையிலான கிதிரிப்பேட்டை கூட்டுச்சாலை பகுதியிலும், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியும், இதுவரை அதன்படி, நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவகுமார் கூறியதாவது:
வாலாஜாபாத் ரயில்வே பாலம் மீது மின்விளக்கு வசதி கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் மனுக்கள் அளித்துள்ளோம். சமீபத்தில் இது தொடர்பாக தமிழக முதல்வர் தனிப்பரிவுக்கும் மனு அளித்தேன்.
அம்மனுவிற்கு ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பதில் அறிக்கை அளித்துள்ளார்.
அதில், சாலையில் மின்விளக்குகளை அமைக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தை அனுக வேண்டும் என, பதில் கூறப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலரிடத்திலும் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு துறை ரீதியான அதிகாரிகளிடத்தில் தொடர்ந்து மனுக்கள் அளித்தும் பயனின்றி அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் ரயில்வே பாலம் மீது மின்விளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

