/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் திறந்தவெளி கல் குவாரிகளால் ஆபத்து வேலி, எச்சரிக்கை பலகை வைக்காமல் அலட்சியம்
/
காஞ்சியில் திறந்தவெளி கல் குவாரிகளால் ஆபத்து வேலி, எச்சரிக்கை பலகை வைக்காமல் அலட்சியம்
காஞ்சியில் திறந்தவெளி கல் குவாரிகளால் ஆபத்து வேலி, எச்சரிக்கை பலகை வைக்காமல் அலட்சியம்
காஞ்சியில் திறந்தவெளி கல் குவாரிகளால் ஆபத்து வேலி, எச்சரிக்கை பலகை வைக்காமல் அலட்சியம்
ADDED : ஜன 26, 2025 01:55 AM

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு மற்றும் தனியார் கல் குவாரிகள், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இயங்குகிறது. தற்போது, மாவட்டம் முழுதும் 51 இடங்களில் கல் குவாரிகள் செயல்படுகின்றன.
ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து, பணிக்காலம் முடிவுற்ற காலாவதியான கல் குவாரிகளும் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் ஆகிய ஒன்றிய கிராமங்களில், காலாவதியான கல் குவாரிகள் பல உள்ளன.
கைவிடப்பட்ட இந்த கல் குவாரிகளில், ஒரு சில இடங்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. பெரும்பாலான கைவிடப்பட்ட கல் குவாரிகள், எவ்வித பாதுகாப்புமின்றி, திறந்தவெளியாகவும், அபாயகரமான பள்ளமாகவும், விபத்து ஏற்படுத்தும் நீர்த்தேக்க பகுதியாகவும் காணப்படுகிறது.
இதில், அவ்வப்போது நீரில் மூழ்கி மனித உயிரிழப்புகளும், குவாரி பள்ளத்தில் தவறி விழுந்து கால்நடைகள் இறப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பயன்பாடின்றி கைவிடப்பட்ட கல் குவாரிகளால் ஆபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான கல் குவாரிகளை சுற்றி வேலி அமைக்க வேண்டும். ஆபத்து ஏற்படுத்தும் பகுதியென எச்சரிக்கை பலகை அமைப்பதோடு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, பாதுகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவாரி பள்ளங்களில் பல அடி ஆழத்திற்கு வீணாக தேங்கி கிடக்கும் தண்ணீரை பயன்பாடுக்கு ஏற்ற வகையில் திட்டமிட வேண்டும் என, சமூக ஆர்லவலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கனிமவள நிதி உதவி இயக்குனர் வேடியப்பன் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி முடிந்து பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட கல் குவாரிகள் குறித்து ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைவிடப்பட்ட அரசு சார்ந்த இடத்தின் குவாரிகளில், ஆபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாக்க முள்வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று, தனியாரால் கைவிடப்பட்ட கல் குவாரிகளிலும், நில உரிமையாளர்கள் அனுமதியோடு பாதுகாப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக நிதி வேண்டி, திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசு பரீசிலனையில் உள்ளது.
மேலும், கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை, சுத்தகரிக்கப்பட்ட குடிநீராக்கவும், கோடைக்காலத்தில் விவசாய பயன்பாட்டிற்கு பாசனமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இத்திட்ட செயல்பாடுகள் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

