/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிய டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு: சவாலான பணிகளை முடிப்பாரா?
/
புதிய டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு: சவாலான பணிகளை முடிப்பாரா?
புதிய டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு: சவாலான பணிகளை முடிப்பாரா?
புதிய டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு: சவாலான பணிகளை முடிப்பாரா?
ADDED : அக் 25, 2025 11:27 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த வெங்கடேஷ், சென்னை மண்டல வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னை மண்டல அலுவலராக பணியாற்றி வந்த முருகேசன், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலராக, கோப்புகளில் கையெழுத்திட்டு நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
சென்னையை ஒட்டியிருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் துறையில் நிலவும் நிர்வாக ரீதியிலான சவாலான பணிகளை புதிய மாவட்ட வருவாய் அலுவலர் நிறைவேற்ற வேண்டும் என, வருவாய் துறையினரும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.
காஞ்சிபுரம் மற்றும் உத்திர மேரூர் நகரங்களுக்கான புதிய பேருந்து நிலையங்களுக்கு இடம் பிரச்னை இன்னும் தீராமல் உள்ளது.
மாவட்டம் முழுதும் உள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. ஒரே இடத்தில் பணியாற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மாறாமல் உள்ளனர்.
பட்டா திருத்தம் மற்றும் யு.டி.ஆர். பட்டா திருத்தம் போன்ற விசாரணைகள் மீது உத்தரவுகள் பிறப்பிக்காமல் உள்ளது. வருவாய் துறையின் இதுபோன்ற பல்வேறு பணிகளை புதிய மாவட்ட வருவாய் அலுவலர் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

