/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓராண்டாக திறப்பு விழாவிற்கு புதிய ரேஷன் கடை காத்திருப்பு
/
ஓராண்டாக திறப்பு விழாவிற்கு புதிய ரேஷன் கடை காத்திருப்பு
ஓராண்டாக திறப்பு விழாவிற்கு புதிய ரேஷன் கடை காத்திருப்பு
ஓராண்டாக திறப்பு விழாவிற்கு புதிய ரேஷன் கடை காத்திருப்பு
ADDED : ஆக 07, 2025 01:50 AM

உத்திரமேரூர்:ஒழுகரை கிராமத்தில், கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடம், ஓராண்டாக திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
உத்திரமேரூர் ஒன்றியம், ஒழுகரை கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, விநாயகர் கோவில் தெருவில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.
இந்நிலையில், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்தது.
இதனால், மழை நேரங்களில் கூரையில் இருந்து மழைநீர் வழிந்து, உணவு பொருட்கள் சேதமாகி வந்தன. எனவே, புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, 2024 -- 25ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அரசு துவக்கப் பள்ளி எதிரே புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டடம் கட்டி ஓராண்டாகியும், பயன்பாட்டிற்கு வரவில்லை.
இது குறித்து ஒழுகரை ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி கூறுகையில், ''புதிய ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.