ADDED : மே 10, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 19-வது வார்டு ஆனந்தாபேட்டையில், புதிதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் காஞ்சிபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., எழிலரசனிடம் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., ஒதுக்கீடு செய்த 18.10 லட்சம் ரூபாயில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
புதிய ரேஷன் கடையை காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.எல்.ஏ., எழிலரசன் நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாநகராட்சி அதிகாரிகள், வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.