/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தாண்டு கொண்டாட்டம்: கோவில்களில் திரண்ட பக்தர்கள்
/
புத்தாண்டு கொண்டாட்டம்: கோவில்களில் திரண்ட பக்தர்கள்
புத்தாண்டு கொண்டாட்டம்: கோவில்களில் திரண்ட பக்தர்கள்
புத்தாண்டு கொண்டாட்டம்: கோவில்களில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஜன 02, 2024 04:10 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்றவை ஏற்படாமல் இருக்க, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,சுதாகர் தலைமையில், 600க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவு முழுதும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட பிற வகையான வாகனங்களை நிறுத்தி, வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
வழக்கு ஏதும் பதிவாகவில்லை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் சாம் ராஜதுரை, மூங்கில் மண்டபம் பகுதியில், பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீசார் ஈடுபட்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில், குற்ற சம்பவங்கள் மற்றும் விதிமீறல் வழக்கு பதிவாகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்தில் நகரில், சிறுவர்கள் மட்டுமல்லாமல், இளைஞர்கள், யுவதிகள், பெரியவர்கள் என, தெருக்களில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, ஆட்டம், பாட்டம் என புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கோவில்களில் சிறப்பு தரிசனம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில் உள்ள கோவிலில், மூலவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு தேவி எல்லையம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
108 கிலோ சந்தனத்தில்...
குன்றத்துார் முருகர் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு வழிபாடு கோலாகலமாக நடந்தது.
குன்றத்துார் மலைக் குன்றில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 108 கிலோ சந்தனத்தில் வடிவமைக்கப்பட்ட வள்ளி, தெய்வானை, முருகர் சிலை பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தனுர்மாத பூஜைக்குப்பின், பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சி சங்கர மடத்திலும் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று காலையில் சிறப்பு அபிஷேகமும், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
l சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று காலை தங்க நாணய கவச அலங்காரத்திலும், தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு பின் தங்க கவச அலங்காரத்திலும், மாலை புஷ்ப அங்கி அலங்காரத்திலும் அருள்பாலித்தார்.
பக்தர்கள் வசதிக்காக, நிழற்பந்தல், குடிநீர், இலவச கழிப்பறை, காலணி பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
தி.நகர் திருமலை - திருப்பதி தேவஸ்தான வளாகம், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு, லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

