sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்க தடை

/

 புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்க தடை

 புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்க தடை

 புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்க தடை


ADDED : டிச 31, 2025 03:43 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, 160 இடங்களில், 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக, எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று இரவு 7:00 மணி முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய மாநில நெடுஞ்சாலைகள், மாநகர பிரதான சாலைகள் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகள் என, மொத்தம் 36க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவர் என, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் 160க்கும் மேற்பட்ட மிக முக்கிய இடங்கள், கோவில்கள், தேவாலயங்கள் போன்றவற்றுக்கு ரோந்து காவலர்கள் நியமித்து, தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி.,சண்முகம் தலைமையில், 2 கூடுதல் எஸ்.பி.,க்கள், 6 டி.எஸ்.பி.,க்கள், 12க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்கு, மொத்தம் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படஉள்ளனர்.

 மாநகர பிரதான சாலைகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது

 மக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாக வெடித்தல் கூடாது

 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது. மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்பப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்

 இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாடும் விதமாக பெண்களை கேலி மற்றும் கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். மீறும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

 வாகன பந்தயம் மற்றும் சாகசத்தில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்

 இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடுதல், பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் 89397 36100 என்ற எண்ணுக்கு போனிலும், வாட்ஸாப் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில், ஆளில்லா விமானம் வாயிலாக, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர் . பொதுமக்கள் கடலில் இறங்க மற்றும் குளிக்க, தடை செய்யப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்க, 30 இடங்களில் கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தவிர, 425 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் இருப்பர். சென்னை முழுதும், புத்தாண்டு அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us