/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிதாக சேர்ந்த சமையலர் 75,000 ரூபாயுடன் ஓட்டம்
/
புதிதாக சேர்ந்த சமையலர் 75,000 ரூபாயுடன் ஓட்டம்
ADDED : ஜன 26, 2025 08:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி: ஹோட்டலில் பணிக்கு சேர்ந்த வாரத்திலே, 75,000 ரூபாய் திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓட்டேரி அருகே பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார், 36. இவர், அதே பகுதியில், 'கணபதி மெஸ்' என்கிற பெயரில், ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையில், கடந்த வாரம் சதீஷ்குமார் என்பவர் சமையல் பணிக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சதீஷ்குமார் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த 75,000 ரூபாயை திருடி சென்றுள்ளார். இது குறித்து ஆனந்த் குமார் அளித்த புகாரின்படி ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.