தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கறவை மாடுகள் பராமரிப்பு

கறவை மாடுகள் பராமரிப்பு

கறவை மாடுகள் பராமரிப்பு


ADDED : மே 01, 2019 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2019 04:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கறவை மாடுகள் சினைக்கு வந்தவுடன், 18 மணி நேரத்தில், செயற்கை கருவூட்டல் ஊசி போட வேண்டும் என, கால்நடை துறையினர் தெரிவித்தனர்.இது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர், கோபி கூறியதாவது:கறவை மாடுகளுக்கு, சினை பருவத்திற்குரிய அறிகுறிகள், காலை நேரத்தில் தென்பட்டால், மாலை நேரத்திலும்; மாலை நேரத்தில் தென்பட்டால், காலை நேரத்திலும், செயற்கை கருவூட்டல் ஊசி போட வேண்டும்.அறிகுறி தெரிந்த, 18 மணி நேரத்திற்குள், மாடுகளை தனி இடத்தில் கட்டி, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகே, செயற்கை கருவூட்டல் ஊசி செலுத்த வேண்டும்.

அதன் பின், 15 நிமிடங்கள் கழித்து, வீட்டுக்கு ஓட்டி செல்ல வேண்டும். மாடுகளை முறையாக பராமரித்தால், ஆண்டுக்கு ஒரு கன்று எளிதாக போடும்; பாலிலும் சீரான வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 044 - -2726 4019

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us