/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் இரவு நேர மழையால் நெல் அறுவடை செய்வதில் சிக்கல்
/
வாலாஜாபாதில் இரவு நேர மழையால் நெல் அறுவடை செய்வதில் சிக்கல்
வாலாஜாபாதில் இரவு நேர மழையால் நெல் அறுவடை செய்வதில் சிக்கல்
வாலாஜாபாதில் இரவு நேர மழையால் நெல் அறுவடை செய்வதில் சிக்கல்
ADDED : செப் 08, 2025 01:05 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமங்களில், சில தினங்களாக அடிக்கடி இரவு நேரங்களில் பெய்யும் மழையால் நெல் பயிர்களை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நவரை பருவத்தை தொடர்ந்து, விவசாயிகள் சொர்ணவாரி பருவ சாகுபடிக்கு அதிக அளவில் நெல் பயிரிட்டுள்ளனர்.
அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தகரம், நாய்க்கன்குப்பம், பூச்சிவாக்கம், கிதிரிப்பேட்டை, நெய்க்ககுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கிணறு மற்றும் ஆழ்த்துளை கிணறு மூலம் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
இதில், கடந்த மே, ஜூன் மாதங்களில் நடவு செய்த பயிர்கள் தற்போது கதிர் வந்த நிலையிலும், ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையிலும் உள்ளது.
இந்நிலையில், சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே இரவு நேரங்களில் திடீர் மழைப்பொழிவு ஏற்படுகிறது.
இவ்வாறு இரு தினங்களாக இரவு நேரங்களில் பெய்த மழைப்பொழிவால் புத்தகரம், ஊத்துக்காடு, நெய்க்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கதிர் வந்த நிலையிலான நெல்பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளன.
மழைப்பொழிவு தொடர்ந்தால் அப்பயிர்கள் சேதமாகி மகசூல் பாதிப்பதோடு, அறுவவை செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.