ADDED : அக் 28, 2024 11:40 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் : ஊத்துகாடு கிராம நத்தம் வகைப்பாடு சர்வே எண்.835/1 பேருந்து நிலையம் அமைக்க ஊராட்சி தலைவர் மனு அளித்திருந்தார்.
இதற்கு, ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினர் இடையே, அமைதி பேச்சு கூட்டம் நேற்று, வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
இதில், இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், ஊத்துக்காடு கிராமத்தினர், பயன் பெறக்கூடிய பேருந்து நிலையம் கட்டும் பணி முடங்கும் அபாயம் உள்ளது.
