தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'விதிமீறல் வழக்கு எதுவும் இல்லை'

 'விதிமீறல் வழக்கு எதுவும் இல்லை'

 'விதிமீறல் வழக்கு எதுவும் இல்லை'


ADDED : மார் 28, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்கு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தேர்தல் விதிமீறல் என, புகார் வந்தால் உடனடியாக களத்திற்கு சென்று ஆய்வு பணிகள் செய்கின்றனர்.

இருப்பினும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும்போது விதிமீறல் அதிகளவில் நடக்கும் எனவும், அப்போது விதிமீறல் வழக்குகள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us