ADDED : ஜூலை 23, 2025 12:43 AM

செங்குன்றம்:வடமாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவம் செங்குன்றத்தில் நடந்துள்ளது.
செங்குன்றம் - சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே உள்ள காலி மனையில், 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர், நேற்று காலை சடலமாக கிடந்தார்.
உடல் முழுதும் காயங்கள் இருந்தன. வடமாநில வாலிபரை, கட்டை மற்றும் கற்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, கூறப் படுகிறது. செங்குன்றம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இறந்தவர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
மாதவரம் மோப்ப நாய் பிரிவில் இருந்து வந்த டாபி மோப்பநாய், சடலம் கிடந்த இடத்தில் இருந்து சிறிது துாரம் ஓடி நின்றது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அம்பிகா தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில், நள்ளிரவு வரை மது விற்கப்படுகிறது.
'இதனால், தினமும் ஏதாவது ஒரு அடிதடி சம்பவங்கள் நடக்கின்றன. மதுக்கடையை மூடாவிட்டாலும், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடுவது அவசியம்' என்றனர்.